இந்தியா, மே 8 -- தமிழகத்தில், சென்னையிலும், பிற இடங்களிலும், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தற்போது பசுமையாக காட்சியளிப்பது குறித்து நாம் கவலைகொள்ள வேண்டியுள்ளது.

ஏனெனில் ஊடுறுவும் தாவரமான ஆகாயத்தாமரை கழிவுநீர் சிகிச்சையின்றி கலந்த ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் பெருமளவு வளர்ந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலிலும், தமிழக நீர்வளத்துறை அதை நீக்க எந்த முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஊடுறுவும் தாவரமான ஆகாயத்தாமரை நீர்நிலைகளில் பரவிப்பெருகும்போது, ஆக்ஸிஜன் அளவை குறைப்பதோடு, சூரியவெளிச்சம் நீரினுள் செல்வதை தடுத்து, ஒளிச்சேர்க்கை நடப்பதையும் தடுக்கின்றன.

ஆகாயத்தாமரை நிறைந்த நீர்நிலைகளில், நீர் ஆவியாதலும்,2.5 மடங்கு அதிகம் நடப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

ஆகாயத்தாமரை வேர்கள்...