இந்தியா, மே 2 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

ரிஷபம்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்...