இந்தியா, பிப்ரவரி 12 -- ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் படித்து முடிக்கும் வரை அவையில் இருந்தேன். தேசிய கீதம் பாடப்படும் என்று கருதி இருக்கையில் இருந்து எழுந்தேன். சபாநாயகர் சில விமர்சனங்களை முன்வைத்ததால் அவையில் இருந்து வெளியேறினேன் என சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த செய்திக்குறிப்பில்,

'1.ஆளுநரின் உரை குறித்த வரைவானது தமிழ்நாடு அரசிடம் இருந்து ராஜ்பவனுக்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வந்தது. அந்த உரையில் பல பத்திகள் தவறான கூற்றுகளுடனும் உண்மையிலிருந்து வெகு தொலைவிலும் இருந்தன.

2.மாண்புமிகு ஆளுநர் பின்வரும் அறிவுரைகளுடன் கோப்பைத் திருப்பி அனுப்பியிருந்தார்:

(அ) தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை காட்டி, ஆளுநரின் உரையின் துவக்கத்தின்போதும்...