இந்தியா, ஏப்ரல் 29 -- சமீபத்திய ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர்கள் உருவாவது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலை எடுத்துள்ளது. தொழில் முனைவோர் மனப்பான்மை உள்ளவர்களுக்கு, தங்கள் வீடுகளில் இருந்து ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. இந்திய சந்தைக்கு ஏற்ற பத்து இலாபகரமான சிறு தொழில் ஐடியாக்கள் இங்கே:-

ஆன்லைன் மூலம் கற்கும் இணையத்தளங்களின் எழுச்சி மற்றும் தரமான கல்விக்கான தேவை ஆகியவற்றுடன், ஆன்லைன் பயிற்சி ஒரு வளர்ந்து வரும் வணிகமாக மாறி உள்ளது. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் அல்லது திறமை இருந்தால், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி சேவைகளை வழங்கலாம்.

இந்திய உணவு வகைகள் அதன் பன்முகத்தன்மை மற்றும் சுவைகளுக்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உங்களிடம் சமையல் திறன் இருந்தா...