இந்தியா, மே 7 -- விருந்தோம்பல் வலைதளத்தை சேர்ந்த செஃப் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் ஹெச்.டி தமிழுடன் பகிர்ந்துகொண்ட பப்பாளிக்காய் பொரியல் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

பப்பாளிக் காய் - 400 கிராம்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

துருவிய தேங்காய் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை - சிறிதளவு

வேகவைத்த கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

அதிகம் பழுக்காமல் பாதியளவு பழுத்த பப்பாளிக்காயை எடுத்துக்கொள்ளவேண்டும். அதன் தோலை சீவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு மெலிதாக துருவிக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்...