இந்தியா, பிப்ரவரி 28 -- புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் பழக்கமாக மட்டுமில்லாமல் காலப்போக்கில் அது அடிமையாக்கிவிடும். இந்த பழக்கத்தினால் பல்வேறு கடுமையான உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும். கேன்சர் பாதிப்பு, நுரையிரல் நோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த பழக்கத்தை கைவிட பலமுறை முயற்சி செய்து விடமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். இதுபோன்று நம்மை அடியாக்கி பழக்கத்திலிருந்து விடுபட முக்கிய டிப்ஸ்களை கையாளலாம் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என முடிவு செய்தால் அதில் தீர்க்கமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக சில உணவு பழக்கங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிட்டா கரோடீன், வைட்டமின் ஏ, வ...