இந்தியா, மே 5 -- சுக்கிரனுக்குரிய நட்சத்திரமான பூராடம், குரு பகவானின் தனுசு ராசியில் முழு நட்சத்திரமாக உள்ளது.

அசுர குரு எனப்படும் சுக்கிரன், சுபிட்சத்தின் காரகன், லவுகீக சுகங்களுக்கு அதிபதி ஆவார். அதாவது அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் இருப்பார்கள். அவர்களின் நிலையை பார்த்து மற்றவர்களும் அவரின் வழியை பின்பற்றுவார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும். தேவ குருவின் வீட்டில் அசுர குரு இருப்பதால், சிலர் வீம்புக்கு வாதம் செய்வார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணவதியான மனைவி கிடப்பார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பா...