இந்தியா, மே 7 -- கோடையின் வெப்பத்தை குறைக்க விரும்பும் பானங்களுள் ஒன்றுதான் புதினா தண்ணீர். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி, உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துதையும் வழங்குகிறது.

இது கலோரிகள் குறைவான தண்ணீர். இதில் ஓரளவுக்கு சர்க்கரை உள்ளது. உங்கள் நாளை ஆரோக்கியமாக துவங்க இந்த தண்ணீர் உதவும். உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. புதினா தண்ணீரை உங்கள் உணவின் ஒரு அங்கமாக வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புதினாவை தண்ணீரில் ஊறவைத்து தயாரிப்பது புதினா தண்ணீர். மெந்தா குடும்ப தாவரங்களைச் சேர்ந்தது புதினா. இது ஆயுர்வேத மருந்துகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறுவைத்து காலை எழுந்தவுடந்...