இந்தியா, ஏப்ரல் 18 -- ஆண், பெண் என இரு பாலர்களின் உடலிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களுக்கு ஜோதிடத்தில் தனிச் சிறப்பு மிக்க அர்த்தங்கள் உள்ளன. மச்சங்கள் நமது தலைவிதியை குறிப்பது மட்டுமின்றி, ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன.

நமது உடலில் இருக்கும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு தான் கணிக்கப்பட்டிருக்கிறது மச்ச சாஸ்திரம். நம்முடைய உடலில் இருக்கும் ஒரு சிறு புள்ளிகளைத்தான் மச்சம் என்கிறோம். இது கருப்பு, மஞ்சள், நீலம், சிவப்பு, சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் இருக்கின்றன. சிலருக்கு கடுகு போல சிறிதாகவும், சிலருக்கு அதைவிட பெரிதாகவும் காணப்படலாம்.

நமது உடல் பாகங்களில் உள்ள மச்சங்கள் சுப பலன்களை தரும் வல்லமை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு முகத்தில் மச்...