இந்தியா, பிப்ரவரி 12 -- கடுக்காய் பொடியின் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்ற பழமொழியே இருக்கிறது. இந்த மூன்று உணவு பொருட்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கடுக்காய்க்குத்தான். கடுக்காயின் அறு சுவையும் இருக்கிறது.

கடுக்காய் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறது. இஞ்சி,சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கூடவே ஆரோக்கியமான உணவுகளான கேழ்வரகு, முருங்கைப்பூ, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களையும் நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுக்காய் தோல் செரிமான பிரச்சினையை குறைப்பதோடு மலச்சிக்கலை தடுக்கும்.அதே போல மலம் அதிகமாகச் சென்றாலும்,அதனையும் தடுக்கும். உடலின் சர்க்கரையின் அளவை குறைக்கும். உடல் எடையை குறைக்கும்....