இந்தியா, மே 1 -- மேஷ ராசியில் இருந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி, சித்திரை மாதம் 18ஆம் நாளான இன்று பகல் 1 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படியும், மாலை 5.19 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படியும் ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நேரப்படி வழிபாடுகள் நடைபெறும்.

8ஆம் இடத்தில் வரும் குரு பகவானால், ராஜயோகம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் நல பாதிப்புக்கு சுய மருத்துவம் எடுத்துக் கொள்ள கூடாது. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது.

தனம், வாக்கு, குடும்பம் விஷயங்களில் அனுகூலம் கூடும். வாழ்கை துணைக்கு புகழ் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குது, வாகனம் வாங்குவது போன்ற சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உடன் அன்னோனியம் அதிகரிக்கும். கடன் வாங்கி முதலீட...