இந்தியா, பிப்ரவரி 28 -- டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். தொண்டர்கள் இவரை 'பாபுஜி' என்று அன்புடன் அழைத்தனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இன்று வளர்ந்து நிற்கும் இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் . அவரது நினைவு தினம் இன்று (பிப் 28).

கடந்த 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாவீர சாகி, தாய் கமலேசுவரி தேவி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியில் சிறந்து வி...