இந்தியா, மார்ச் 12 -- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை ஆதரித்தும், இந்தச் சட்டம் 'அரசியலமைப்பிற்கு விரோதமானது' என்றும் கண்டனம் செய்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது ரத்து செய்யப்படும் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

சட்டத்தில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்த வரலாற்று ஆதாரங்களை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மீக ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது என்று வாதிட்டார். "பிரிவினையின் அடிப்படையில், மதம் தங்கள் நாட்டின் அடிப்படை என்று ஒரு நாடு கூறியதும், அவர்கள் பாகிஸ்தானை உருவாக்கினர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் மதம் நமது தேசியத்தின் அட...