இந்தியா, மே 7 -- நீரின்றி வறண்டு போவதாலும், உயர் வெப்பம் காரணமாகவும், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை தாலுகா, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள், பல ஆண்டுகளாக பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கருகிப்போவதை காண சகிக்காமல், அவற்றை வெட்டிப் போடும் அவலம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில்,1.6 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள 2.5 கோடி வளர்ந்த தென்னை மரங்கள் வறட்சியாலும், உயர் வெப்பத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இவற்றில் 50 சதவீதம் தென்னை மரங்கள் நீரின்றி கருகி அழியும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளாக தென்னை மரங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், நீரின்றியும், உயர்வெப்பம் காரணமாகவும் கருகியதால், அவற்றை வெட்டும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரி...