இந்தியா, ஏப்ரல் 26 -- சிவாஜி கணசன் நடிப்பில் ஜனரஞ்சக படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் தர்மராஜா. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சாண்டோவ் சின்னப்பதேவரின் சகோதரர் எம்.ஏ. திருமுருகன் இயக்கியிருப்பார்.

கேஆர் விஜயா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, கீதா, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜி வில்லனாக நடித்திருப்பார்.இதுதான் அவரது கடைசி படமாகவும், நெகடிவ் ரோலில் நடித்த படமாகவும் உள்ளது.

பொதுவாகவே சிவாஜி கணேசன் படங்கள் என்றாலே நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கதை, திரைக்கதை, கதாப்த்திரங்களின் வடிவமைப்பானது இருக்கும். ஆனால் இந்த படத்தில் கதை எம்ஜிஆர் படங்களை போல் அதிரடி ஆக்‌ஷன் பாணியில் அமைந்திருக்கும்.

அதேபோல் சிவாஜியின் கதாபாத்திரமும் கடவுள் பக்தி, தங்கை செண்டிமெண்ட்,...