இந்தியா, மே 9 -- 27 years of Love Today: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலசேகரன் இயக்கிய படம் தான், லவ் டுடே. இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் சுவலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் மந்த்ரா, ரகுவரன், கரண், ஸ்ரீமன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஷிவா இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இப்படம் நடிகர் விஜய்யின் கரியரில் மிக முக்கிய திருப்புமுனைப் படமாக இருந்தது. இது திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி, சூப்பர் ஹிட்டானது. மேலும் தெலுங்கு, கன்னடா, இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது.

இப்படத்தில் கணேஷ் என்னும் இளைஞர் சந்தியா என்னும் இளம்பெண்ணை விடாப்பிடியான ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். ஆனால் அப்பெண்ணுக்கு அவன் மீது ஆர்வம் இல்லை. அவரது இடைவிடாத வெறித்தனமான காதல் நிறைய ...