இந்தியா, மே 8 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

சனி ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகத்தையும் அள்ளிக் கொடுப்பார். கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை அனைத்து ராசிகளுக்கும் நிகராக கொடுத்தாலும் ஒரு சில ராசிகளின் மீது அவருடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரைசனி நடந்த...